December 16th, 2011

Events

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அறுபடைவீடு முருகன் ஆலயத்தில், மன்ற உறுப்பினர்கள் மாதந்தோறும், சுழல் முறையில்  கார்த்திகை அன்று  அபிஷேகம் ஆராதனைகளை கார்த்திகை உபயமாக செய்து வருகிறார்கள்.

—————————————————————–

நகரத்தார் நற்பணி மன்றம் –  சென்னை, ஒருநாள் திருத்தல சுற்றுலா  Feb 27, 12

நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை,  பாஸ் அவின்யு , 3/621,கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம்,  சென்னை – 41, உறுப்பினர்களில் 40 நபர்கள், 26/02/2012 அன்று,  ஒருநாள் ஆந்திர திருத்தல சுற்றுலா சென்று வந்தனர்.
கடலுக்கு அடியில் மறைத்து வைத்த வேதங்களை, மச்ச அவதாரம் மூலம் மீட்ட திருமால் அருள் பாலிக்கும் நாகலாபுரம் வேத நாராயணப் பெருமாள் ஆலயம், சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் மயங்கி, பார்வதியின் மடியில் தலை சாய்த்து பள்ளிகொண்ட திருக்கோலத்தில் பக்தர்களை பாதுகாக்கும் சுருட்டப்பள்ளி,  பள்ளி கொண்டீஸ்வரர் ஆலயம் , ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை தன் வாலினால் பலம் கொண்ட மட்டும்  இழுத்தும், இடத்தை விட்டு நகராமல் நம்மைக் காக்கும்  ராமகிரி, வாலீஸ்வரர் ஆலயம்  மற்றும் காக்களூர் ஆஞ்சநேயர் ஆலயம் ஆகியவற்றிற்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர் .
சுற்றுலா ஏற்பாடுகளை  செயலாளர் ஆறு .சுப்பிரமணியன் சிறப்பாக செய்திருந்தார்கள்

 

நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை–பிள்ளையார் நோன்பு விழா  Jan 7, 12

சென்னை -41, பாலவாக்கம், 3/621, கிழக்கு கடற்கரை  சாலையில் உள்ள  நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை, 29/12/2011 அன்று மாலை  திருவான்மியூர்,  கிழக்கு மாட வீதியில் உள்ள ராஜலக்ஷ்மி  கல்யாண மண்டபத்தில் முதல்  ஆண்டு  பிள்ளையார் நோன்பு விழாவை சிறப்பாக கொண்டாடியது.
திருவான்மியூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் நகரத்தார்கள்,   தங்கள் குடும்பத்துடன் விடாது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் , விழாவில் கலந்து கொண்டு, விநாயகரை வழிபட்டு. இழை எடுத்து, இறை அருள் பெற்றனர்.
விழாவிற்கு வந்திருந்த நகரத்தார்களை, மன்றத்தின் தலைவர், முனைவர்  M. சீனிவாசன் மற்றும் துணைத்தலைவர், பொறியாளர். MR.அழகப்பன் ஆகியோர் வரவேற்றனர். மன்றத்தின் நோக்கங்களை  T.அருணாசலம் கணேஷ்வர்  தெரிவித்தார் .மன்ற உறுப்பினர்களில் முதியவர்களான  திரு. காசி ஸ்ரீ சாத்தப்பன் அவர்களும் (ராமேஸ்வரத்திலிருந்து  காசிக்கு பாதயாத்திரையாக சென்றவர், மற்றும்  செட்டிநாட்டு 76 ஊர்களுக்கும் பாதயாத்திரையாக சென்றவர்)  பேராசிரியர்.  திரு. AL..குமரப்பன் அவர்களும் இழைகளை எடுத்துக்கொடுத்தனர்.
பொறியாளர். M.பழனியப்பன்  மங்கலப் பொருட்களை ஏலம் விட்டபிறகு,  பொறியாளர் M.ராமசாமி, S.சண்முகம், A.கருப்பையா, N.சுப்பிரமணியன் ஆகியோரின் உபசரிப்பில் இரவு விருந்து வழங்கப்பட்டது. நிறைவாக , செயலாளர் AR.சுப்பிரமணியன் நன்றி கூற, பிள்ளையார் நோன்பு  விழா இனிது நிறைவேறியது .

 

footer